Total Pageviews

Friday, 20 January 2012

The first welcome speach of Tamil viruksham by inba subramanian

The first welcome address by inba subramanian on 11-01-2012

தமிழ் விருட்சத்தின் முதல் நிகழ்ச்சி - 11/01/2012





பாராட்டுவது மிக அழகான விடயம்.. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் எந்த ஒரு சின்ன பாராட்டும் மேலும் சிறப்பாக செயல் பட வைக்கும் ஒரு நிகழ்வு..
அங்கீகாரம் வேண்டியே ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் செயல் படுகிறோம்.. சின்ன கை தட்டும் ,அங்கீகாரமும் , எந்த ஒரு செயலையும் மேம்படுத்தும்..

சமீப காலங்களில் உலகெங்கும் வசிக்கும் தமிழர்கள், எவ்வித பேதமுமின்றி தமிழ் இணத்தின் மீது நடந்த அத்துமீறல்களை கண்டித்தார்கள் .

இதன் தொடர்ச்சியாக பேசிகொண்டிருக்கையில் நம் நாட்டில் கண்டனம் தெரிவிக்கபடுகிறது..போராட்டங்களை தாண்டியும் பல விதமான நிகழ்வுகளை பாதிக்க பட்டோருக்காக நடத்துகிறோம்.. அதுவே பாராட்டு என்று வரும்பொழுது நமக்குள்ளே பாராட்டி விருதுகளையும் கொடுப்பது என்பதாக அது நடக்கிறது.. நம்மை நாமே பாராட்டிகொள்வதை விடுத்தது இந்திய மண்ணை தாண்டி ,வெளி நாடுகளில் வாழும் தமிழர்களை பாராட்டி அல்லது விருது வழங்குதல் என்ற நிகழ்வுகள் ஏதும் நடந்தாக குறிப்பு இல்லை..

இவை எல்லாவற்றையும் தாண்டி முதல் முறையாக ஒரு மலேசியா தமிழ் பெண்மணிக்கு தாய் தமிழ்நாட்டில் மிக சிறப்பாக நடந்த ஒரு பாராட்டு விழாவில் ,"ஒளிரும் தமிழர்" என்ற விருது வழங்கும் நிகழ்வு நடந்தது.

மலேசியா மண்ணில் பிறந்த தமிழ் பெண்மணி திருமதி ஜெயா அந்நாட்டு அரசியலில் வெற்றி பெற்ற பெண்ணாய் திகழ்ந்து ,அந்நாட்டு பிரதிநிதியாய் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய முதல் தமிழ் பெண் என்ற பெருமை பெற்று . மேலும் மலேசியா நாட்டில் உள்ள பல விருதுகளை பெற்ற அவர் "டத்தீன் படுக்கா " என்ற உயரிய விருதை சிலாங்கூர் சுல்தான் அவர்களிடமிருந்து பெற்றவர். மிக சிறப்பாக சமுதாய சேவை செய்தமைக்காக பல வெற்றிகளை பெற்ற டத்தீன் படுக்கா ஜெயா பார்த்திபன் அவர்களுக்கு தான் அந்த பாராட்டு விழாவும் விருது வழங்கும் விழாவும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடந்தேறியது.

அந்த அபூர்வ நிகழ்வை பன்னீர் தெளித்து துவக்கி வைத்தார் வருணன்.
விடாது பெய்த மழை , நகர முடியா மாநகர போக்குவரத்து நெரிசல் ,என்பதையும் மீறி, விழாவிற்கு மிக சரியான நேரத்தில் வரிசையாக உள்ளே நுழைந்தனர் முக்கிய விருந்தினர்கள்..
மேடையில் மூத்த சமூக சேவகி திருமதி சரோஜினி வரதப்பன் அவர்கள், மலேசியா நாட்டின் மத்திய மனிதவள துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியன் அவர்கள், செட்டிநாட்டின் குமார ராணி டாக்டர் மீனா முத்தையா அவர்கள், நாட்டிய உலகின் ராணி பத்மா சுப்ரமணியன் அவர்கள், எழுத்துலக வேந்தர் திரு பிரபஞ்சன் அவர்கள், மலேசியா இந்தியர் காங்கரசின் இளைஞர் அணி தலைவர் திரு மோகன் தங்கராசு அவர்கள், கலைமாமணி சீதா, ஆகியோர் மேடையில் இருக்க,
அன்பிலும் மழையிலும் நனைந்த நண்பர்கள் கிருஷ்ணா கான சபாவின் அரங்கத்தை நிரப்பினர்..


குறிப்பிட்ட நேரத்தில் மலேசிய தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியை உற்சாகத்தோடு தொகுத்து வழங்க மலேசியாவிலிருந்து வந்திருந்தர் மின்னல் பண்பலை தொகுப்பாளர் திருமதி பொன் கோகிலம். அவரின் தமிழே இசையாக இருந்த போதிலும் , சாதனை நாயகிக்கு இசை
வரவேற்ப்பு கொடுத்தார் திரு குமார் அம்பாயிரம்.. மேடையில் துவங்கிய அந்த டிஜிருடு இசை மெல்ல ஒவ்வொருவரையும் இதமாக சூழ்ந்தது....

தனது சரவெடி பேச்சாலும், உற்சாகத்தாலும் அவையை கொண்டாட்டத்தில் வைத்திருந்தார் தமிழ் விருட்சத்தின் செயலாளரும் ,இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான
ஹரிஹரன்.

தமிழ் விருட்சத்தின் சார்பாக வந்திருந்த அனைவரையும் வரேவேற்று உரையாற்றினார் தமிழ் விருட்சத்தின் அமைப்பாளர் திருமதி இன்பா சுப்ரமணியன்.

விழா நாயகி எழுதிய "சில நினைவுகள் சில கனவுகள் " புத்தகத்தை செட்டிநாட்டின் குமார ராணி மீனா முத்தையா அவர்கள் வெளியிட ,நாட்டிய உலகின் ராணி பத்மா சுப்ரமணியன் அவர்கள் பெற்றுகொண்டார் . செட்டிநாட்டின் ராணி சிறப்புரை ஆற்றினார்

பத்மபூஷன் டாக்டர் சரோஜினி வரதப்பன் அவர்கள் ,தமிழ் விருட்சத்தின் இலச்சினையை வெளியிட ,மலேசியா நாட்டின் மத்திய மனிதவள துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியன் அவர்கள் , தமிழ் விருட்சத்தின் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்..

தமிழ் விருட்சத்தின் வெளி நாட்டில் வாழ் வெற்றி பெற்ற தமிழர்களை பாராட்டி விருது வழங்கும் திட்டத்தை சிலாகித்து பேசினார் பத்மபூஷன் டாக்டர் சரோஜினி வரதப்பன் அவர்கள் .

சாகித்ய அகதமி விருது பெற்ற திரு பிரபஞ்சன் அவர்கள் , தமிழின் சாதனை பெண்மணி திருமதி ஜெயா பார்த்திபன் அவர்களுக்கு " ஒளிரும் தமிழர் " என்ற விருதை வழங்கினார்.. நெகிழ்வோடும், அன்போடும் விருதை பெற்றுக்கொண்டார் திருமதி ஜெயா பார்த்திபன் அவர்கள்..

ஒளிரும் தமிழர் ஜெயா பார்த்திபன் அவர்களை பாராட்டி பேசிய திரு பிரபஞ்சனின் அவர்களின் சிறப்பு உரையை தொடர்ந்து , மலேசியா நாட்டின் மத்திய மனிதவள துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..

ஏற்புரை ஆற்றினார் ஒளிரும் தமிழர் திருமதி ஜெயா பார்த்திபன் அவர்கள்.. அவர் வார்த்தைகளில் தனக்கு மீண்டும் உழைக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் அதை காப்பாற்ற வேண்டுமென்ற அவரின் எண்ணமும்,ஒளிரும் தமிழர் விருது கொடுத்திருப்பதாக கூறிய அவர் குரலில் அன்பும் ,நன்றியும் வெளிப்பட்டது.

இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட , அடுத்த ஒளிரும் தமிழர் யார், விழா எப்போ என்ற குரல்களும், அருமையான நிகழ்வு என்ற சிலாகிப்புகளும் மலர்ந்த முகங்களும் உணர்த்தியது ஒன்றைத்தான்..எல்லோருக்குமே பாராட்ட ஆசை தான்.. சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது அனைவரும் பாராட்டுவர்.. பல விருட்சங்கள் வளரும்.. விழுதுகளை தேடி வாழ்த்தும்.. உலகெங்கும், நம் தமிழினம் வலுவாக ஒன்றினையும்.
இது ஒரு சிறிய விதை.. இது விருட்சமாகி செழித்து வளரும்.. பல விழுதுகள் மீண்டும் வெற்றி விருட்சமாகும்..

Tuesday, 10 January 2012

Our committee members

தமிழ் விருட்சத்தின் கமிட்டி உறுப்பினர்கள் :-

Major GI .Pattabiraman : General Manager, Globe dedective agency, Chennai

Mr.BV.Omprakash narayanan  Charted Accountant , Rtd AGM of TIIC

Dr .G.Manoharan  MBBS MS Gastro,  Stanly Hospital. Professor MMC

Ms.Susan Edward , DO,  Principal presidency school ,Chennai

Mr.Soma Valliappan , Head HR - financial industry , successful writer .

Mr..R Ravichandran ,Scretary ,Lions Club ,Velachery ,Editor -City Times, social activist

Mr. KS.Rajashekar , Advocate

Mr .R.Rengarajan , Programme head "varthaga ulagam " 

Ms. Subha keerthana , freelancer, contributing writer inbox 1305 in new indian express

Sunday, 25 December 2011

About Tamil viruksham

About Tamil viruksham
Goose Pimples- a phenomenon one could have not avoided on watching the transformation of the Pallava prince Bodhi dharma into the Impregnable Damo  of china ! However many of us, do feel that glory is the story of past for the tamils and loss & mediocrity is now our forte. This is not true..Many Bodhi dharmas still exist in abundance far and wide the globe. It’s just that we do not care to notice them. They revisit India- The land of their genesis at least once a year walking on the red carpet to the Pravasiya Bharatiya conference , a fete organized by the Government of India to honour these NRIs ( Now Required Indians ! – as it is humorously augmented) . These NRI’s have Never Relinquished India. They still feel a great pride in calling themselves Indians & Tamilians.

 Tamil Vriksham is an organization set up to honor & felicitate  the successful tamilians, who have achieved overseas with ‘OLIRUM THAMIZHAR AWARD’

தமிழ் விருட்சம்

தமிழ் விருட்சம்  உருவான மழை  நாள் மாலை ....

மழை  ஒரு இளம் தூறலாய் பெய்துகொண்டிருந்த ஒரு அழகிய  மாலை நேரம். அபொழுது மக்கள் தொலை காட்சியில் தொகுப்பாளராக 
இருந்த என் இளம் நண்பர் ஹரி என்னை தொலை பேசியில் அழைத்தார். அன்று 
மாலை மலேசியாவிலிருந்து டத்தீன் படுக்கா ஜெயா பார்த்திபன் சென்னை 
வருவதாகவும் அவரை நான் சந்திக்க முடியுமா என்றும்  கேட்டார்.  
ஹரியின் குரலில் ஒரு தனித்தன்மையுண்டு .. அவரது உச்சரிப்பு பல விடயங்களை 
உணர்த்திவிடும்..எனக்கு அவருடன் உண்டான சில வருட பரிச்சயத்தில் நான் 
அதை பலமுறை  நான் உணர்ந்துள்ளேன். அவர் பேச்சில் ஏதோ மிக முக்கிய செய்தி இருந்ததாக பட்டது ..
" இன்பாம்மா , நீங்க அவங்கள பார்த்தால் ரொம்ப சந்தோஷ படுவீங்க.. உங்களை 
போலவே பிரதி பலன் இல்லாமல் எதையும் செய்யும் மனுஷி.. " என்றவர் ,பல வருட அரசியலில் அவர் செய்த சாதனைகளைப்பற்றி  கூற ,அவரை சந்திக்கும் ஆவல் அதிகரித்து .அன்று இரவு ஒரு உணவு விடுதியில் டத்தீன் படுக்கா ஜெயா பார்த்திபன்  அவர்களையும் அவரது கணவர் டாக்டர் திரு பார்த்திபன் அவர்களையும் நானும் ஹரியும் சந்தித்தோம்.. பரஸ்பர அறிமுகங்கள் தொடர்ந்து, அவர் மலேசியா வாழ் தமிழ் மக்களுக்கு செய்த சேவைகளைப்பற்றி தெரிந்து கொண்டேன்..
என்னை ஒரு எழுத்தாளர் என்ற அறிமுகத்தை விடவும் , என் தமிழ் மக்களுக்காக என் குரலை பதிவு செய்த தமிழச்சி என்ற அறிமுகம் என்னை சற்று மகிழ்வு கொள்ள வைத்தது.. இங்கு மாணவர்களுக்கும், சீர்திருத்த பள்ளிகளிலும் ,பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக குரல் கொடுத்த திருப்தி அவர் முன் நான் இருந்த பொழுது இருந்தது..
பெரிய  சாதனை  செய்த தமிழ் பெண்மணியை என் கண் முன் கண்டத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.. அவரோ மிகச்சாதாரணமாக நம் வீட்டு மனுஷி போல பேசினார்..
திருமதி ஜெயா பார்த்திபன் அவர்கள்  "சில நினைவுகள் , சில கனவுகள் " என்ற நூலை மலேசியாவில் வெளியிட்டிருந்தார்கள்.அந்த நூலை சென்னையில் நம் தமிழ் மக்களுக்காக, வெற்றி பெற நினைக்கும் மாணவர்களுக்காக , இங்கு மீண்டும் வெளியிடும் விடயம் பற்றி பேசினோம்..

திருமதி ஜெயா பார்த்திபன்  அவர்கள் ஐக்கிய நாட்டு சபையில் பேசிய முதல் தமிழ் பெண்மணி என்ற மிக முக்கியமான தகவலும் எனக்குச்சொல்லப்பட்டது..
அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது மிக பெரிய விடயம்.. அதை அவர் விபரமாக சொல்லும்பொழுது எனை மறந்து போனேன்..  அது ஒரு அற்புத வினாடி...
போதி தர்மனை அனைவரும் மறந்த பிறகு மீண்டும் நினைவு படுத்திய திரு முருகதாசுக்கு நன்றி கூறும் அதே நேரத்தில், வெற்றி பெற்ற தமிழர்கள் எத்தனை பேர்  இன்னும் நம் கவனத்தில் வராமலே போனவர்களோ என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும் என்னுள் ...

இதோ.. என் கண் முன்னே ஒரு சாதனை செய்த மனுஷி..

எங்கள் உரையாடலோடு இணைந்து கொண்ட மழை வலுக்கவே, நான் கிளம்பினேன் ..

ஹரியும் நானும் பல மணி நேரம் நம் இந்திய மண்ணை தாண்டி வெற்றி பெற்ற திருமதி ஜெயா பார்த்திபன்  அவர்களை பற்றி பேசிகொண்டே இருந்தோம்...

அறிமுகமானதால் இவரை மட்டும் பாராட்டிவிட்டு முடித்து விடாமல் , மேலும் விருட்சங்களாய் வளர்ந்து கிளை பரப்பி ஒளிரும் தமிழர்களை பாராட்டி நாங்களும் பெருமையடைய எண்ணியதன் நிகழ்வாய் பிறந்தது தான் இந்த தமிழ் விருட்சம் அமைப்பு....

இது எங்களுடையது அல்ல.. இது நம்முடைய அமைப்பு .. வாருங்கள் , சேர்ந்து கொண்டாடுவோம் ஒளிரும் தமிழர்களின் வெற்றியை.

தோழமையுடன்,

இன்பா சுப்ரமணியன்,

ஹரிஹரன்.

About the organisers


தமிழ் விருட்சம் அமைப்பாளர்களை பற்றி : --


இன்பா சுப்ரமணியன் :-  எழுத்தாளர் , இரண்டு கவிதை தொகுப்புகள் வெளி வந்துள்ளன. கட்டுரைகள்  பல எழுதியுள்ளார். இவரது " வரை படங்களற்ற பயணம் " என்ற கவிதை நூல் , கவிதை உறவிற்கான முதல் விருதினை பெற்றது. 
தற்கொலை தடுப்பில் தொடர்ந்து பத்திரிக்கைகள் ,ஊடகங்களிலும் பேசி வரும் இவர் , பல பள்ளிகூடங்கள் ,கல்லூரிகள் அதை  ஒரு  சேவையாக செய்து வருகிறார். இவர் ஒரு சமூக ஆர்வலர். பல இடங்களில் பாதிக்க பட்ட மக்களுக்காக  தன் குரலை பதிவு செய்திருக்கிறார்..

Hariharan :-
Now a broadcast Journalist by profession .. He was previously associated with Makkal Tholaikatchi as a Programme anchor. His TV shows include Chellapranigal & Yarukku aayiram. He has travelled overseas and performed shows in countries like Malaysia & Singapore. He is now associated with NDTV Hindu as its News Anchor & Reporter.