தமிழ் விருட்சம் உருவான மழை நாள் மாலை ....
மழை ஒரு இளம் தூறலாய் பெய்துகொண்டிருந்த ஒரு அழகிய மாலை நேரம். அபொழுது மக்கள் தொலை காட்சியில் தொகுப்பாளராக
இருந்த என் இளம் நண்பர் ஹரி என்னை தொலை பேசியில் அழைத்தார். அன்று
மாலை மலேசியாவிலிருந்து டத்தீன் படுக்கா ஜெயா பார்த்திபன் சென்னை
வருவதாகவும் அவரை நான் சந்திக்க முடியுமா என்றும் கேட்டார்.
ஹரியின் குரலில் ஒரு தனித்தன்மையுண்டு .. அவரது உச்சரிப்பு பல விடயங்களை
ஹரியின் குரலில் ஒரு தனித்தன்மையுண்டு .. அவரது உச்சரிப்பு பல விடயங்களை
உணர்த்திவிடும்..எனக்கு அவருடன் உண்டான சில வருட பரிச்சயத்தில் நான்
அதை பலமுறை நான் உணர்ந்துள்ளேன். அவர் பேச்சில் ஏதோ மிக முக்கிய செய்தி இருந்ததாக பட்டது ..
அதை பலமுறை நான் உணர்ந்துள்ளேன். அவர் பேச்சில் ஏதோ மிக முக்கிய செய்தி இருந்ததாக பட்டது ..
" இன்பாம்மா , நீங்க அவங்கள பார்த்தால் ரொம்ப சந்தோஷ படுவீங்க.. உங்களை
போலவே பிரதி பலன் இல்லாமல் எதையும் செய்யும் மனுஷி.. " என்றவர் ,பல வருட அரசியலில் அவர் செய்த சாதனைகளைப்பற்றி கூற ,அவரை சந்திக்கும் ஆவல் அதிகரித்து .அன்று இரவு ஒரு உணவு விடுதியில் டத்தீன் படுக்கா ஜெயா பார்த்திபன் அவர்களையும் அவரது கணவர் டாக்டர் திரு பார்த்திபன் அவர்களையும் நானும் ஹரியும் சந்தித்தோம்.. பரஸ்பர அறிமுகங்கள் தொடர்ந்து, அவர் மலேசியா வாழ் தமிழ் மக்களுக்கு செய்த சேவைகளைப்பற்றி தெரிந்து கொண்டேன்..

என்னை ஒரு எழுத்தாளர் என்ற அறிமுகத்தை விடவும் , என் தமிழ் மக்களுக்காக என் குரலை பதிவு செய்த தமிழச்சி என்ற அறிமுகம் என்னை சற்று மகிழ்வு கொள்ள வைத்தது.. இங்கு மாணவர்களுக்கும், சீர்திருத்த பள்ளிகளிலும் ,பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக குரல் கொடுத்த திருப்தி அவர் முன் நான் இருந்த பொழுது இருந்தது..
பெரிய சாதனை செய்த தமிழ் பெண்மணியை என் கண் முன் கண்டத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.. அவரோ மிகச்சாதாரணமாக நம் வீட்டு மனுஷி போல பேசினார்..
திருமதி ஜெயா பார்த்திபன் அவர்கள் "சில நினைவுகள் , சில கனவுகள் " என்ற நூலை மலேசியாவில் வெளியிட்டிருந்தார்கள்.அந்த நூலை சென்னையில் நம் தமிழ் மக்களுக்காக, வெற்றி பெற நினைக்கும் மாணவர்களுக்காக , இங்கு மீண்டும் வெளியிடும் விடயம் பற்றி பேசினோம்..
திருமதி ஜெயா பார்த்திபன் அவர்கள் ஐக்கிய நாட்டு சபையில் பேசிய முதல் தமிழ் பெண்மணி என்ற மிக முக்கியமான தகவலும் எனக்குச்சொல்லப்பட்டது..
அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது மிக பெரிய விடயம்.. அதை அவர் விபரமாக சொல்லும்பொழுது எனை மறந்து போனேன்.. அது ஒரு அற்புத வினாடி...
போதி தர்மனை அனைவரும் மறந்த பிறகு மீண்டும் நினைவு படுத்திய திரு முருகதாசுக்கு நன்றி கூறும் அதே நேரத்தில், வெற்றி பெற்ற தமிழர்கள் எத்தனை பேர் இன்னும் நம் கவனத்தில் வராமலே போனவர்களோ என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும் என்னுள் ...
இதோ.. என் கண் முன்னே ஒரு சாதனை செய்த மனுஷி..
எங்கள் உரையாடலோடு இணைந்து கொண்ட மழை வலுக்கவே, நான் கிளம்பினேன் ..
ஹரியும் நானும் பல மணி நேரம் நம் இந்திய மண்ணை தாண்டி வெற்றி பெற்ற திருமதி ஜெயா பார்த்திபன் அவர்களை பற்றி பேசிகொண்டே இருந்தோம்...
அறிமுகமானதால் இவரை மட்டும் பாராட்டிவிட்டு முடித்து விடாமல் , மேலும் விருட்சங்களாய் வளர்ந்து கிளை பரப்பி ஒளிரும் தமிழர்களை பாராட்டி நாங்களும் பெருமையடைய எண்ணியதன் நிகழ்வாய் பிறந்தது தான் இந்த தமிழ் விருட்சம் அமைப்பு....
இது எங்களுடையது அல்ல.. இது நம்முடைய அமைப்பு .. வாருங்கள் , சேர்ந்து கொண்டாடுவோம் ஒளிரும் தமிழர்களின் வெற்றியை.
இது எங்களுடையது அல்ல.. இது நம்முடைய அமைப்பு .. வாருங்கள் , சேர்ந்து கொண்டாடுவோம் ஒளிரும் தமிழர்களின் வெற்றியை.
தோழமையுடன்,
இன்பா சுப்ரமணியன்,
ஹரிஹரன்.
No comments:
Post a Comment